பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் பாதுகாப்பு: ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : டிச 01, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தலைமை ஆசிரியர்கள் உள்பட ஐந்து பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மொத்தம், 54 ஆயிரத்து, 35 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 'மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்' பேணுதல் தொடர்பாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட உள்ளது. இதற்காக, முதன்மை கருத்தாளர்களாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஒரு முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் என ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், திருச்சியில், டிச., 3ல் நடக்கிறது. இவர்கள், திருச்சியில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்ற பின், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர்களுக்கு 'மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்' குறித்து பயிற்சி அளிப்பர்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X