சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் மோதல்: ஐந்து பேர் கைது

Added : டிச 01, 2019
Advertisement

அரூர்: அரூர் அருகே, பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில், இரு தரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானூரை சேர்ந்தவர் கன்னியப்பன், 43. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 32, என்பவருக்கும் இடையே, பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 24 மாலை, 5:00 மணிக்கு கன்னியப்பனுக்கும், வேடியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இது குறித்து சங்கீதா, 36, தெய்வம், 29, ஆகியோர், தனித்தனியாக அளித்த புகார்படி, அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருதரப்பை சேர்ந்த வேடியப்பன் அவரது மனைவி தெய்வம், கன்னியப்பன் அவரது அண்ணன் மனைவி சங்கீதா, அவரது தம்பி பாலசுப்பிரமணி, 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X