சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சஸ்பெண்ட் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

Added : டிச 01, 2019
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை யடுத்து, பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பஞ்., நடுநிலைப்பள்ளியில், கணித ஆசிரியராக பிரகாஷ்குமார், 54, உள்ளார். கடந்த, 10 நாட்களுக்கு முன்பு, வகுப்பறையில் ஆறாம் வகுப்பு படிக்கும், இரண்டு மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், தலைமையாசிரியை சிவகாசிசுந்தரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக்கக்கோரி, மாணவியரின் பெற்றோர் உள்பட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதன் பின், மாவட்ட கல்வித்துறை மூலம் ஆசிரியர் பிரகாஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று, ஆசிரியர் பிரகாஷ்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X