ஓசூர்: ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ரிங் சாலையை ஒட்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ளது. ஓசூர் பகுதியில் உள்ள, ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதிய வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கருத்தை, கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் வலியுறுத்தியுள்ளார்.