பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : டிச 01, 2019

ஓசூர்: ஓசூரில், பசுமை தாயகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு, ஸ்பெயின் நாட்டில் வரும், 2 முதல், 13 வரை நடக்கிறது. மாநாட்டில், காலநிலை அவசர நிலையை அறிவிக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பசுமை தாயகம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஓசூர் அதியமான் கல்லூரி முன், மாணவ, மாணவியருக்கு காலநிலை அவசர நிலையை தெரிவிக்கும் வகையில், துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் முனிசேகர், மாவட்ட ஆலோசகர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் வாசுதேவன், செயலாளர் சதீஸ் மற்றும் நிர்வாகிகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காற்று மாசு ஏற்படுவதால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், காலநிலை மாற்றத்தால் உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், உலகில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும். உலகின் தொழில் புரட்சிக்கு பின், பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், 30 ஆண்டுகளில் வெப்பம் அதிகரித்து மிகப்பெரிய பேரழிவை உலகம் சந்திக்கும் என, மாணவ, மாணவியருக்கு விளக்கி கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X