கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூபதி தலைமை வகித்தார். தலைவர் மூர்த்தி தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட மாறுதல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலக கட்டடத்திற்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்பிற்கான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். நில அளவை பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட மையம் சார்பில் நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.