பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சாபில் நடந்த ஆம்புலன்ஸ் விபத்து: பலியான ராணுவ வீரர் உடல் ராயக்கோட்டை வந்தது

Added : டிச 01, 2019
Advertisement

ஓசூர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த, ஆம்புலன்ஸ் வாகன விபத்தில் பலியான ராணுவ வீரர் உடல், சொந்த ஊரான ராயக்கோட்டை கொண்டு வரப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணபாண்டியன், 31. பஞ்சாப் மாநிலம், அபுர் பகுதியில் உள்ள ராணுவத்தில், மருத்துவத்துறையில் பணியாற்றி வந்தார்; கடந்த, 27ல் இரவு சிகிச்சைக்காக வந்த நபரை, மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்சில் பயணம் செய்த சரவணபாண்டியன் உட்பட, ஐந்து பேர் பலியாகினர். இதையடுத்து, சரவணபாண்டியன் உடல் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டு, ராணுவ அதிகாரி மனோ தலைமையில், சொந்த ஊரான முத்தம்பட்டிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. சுற்று வட்டார கிராம மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பலர், சரவணபாண்டியன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. விபத்தில் பலியான சரவணபாண்டியனுக்கும், ஷோபா என்பவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன் திருமணமானது. ஷோபா, நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X