தமிழ்நாடு

திருச்சி, தஞ்சை, புதுகையில் தொடர் மழைக்கு 3 பேர் பலி

Added : டிச 01, 2019
Advertisement

திருச்சி, தஞ்சை, அரியலூர் மற்றும் புதுகை மாவட்டங்களில், தொடர் மழைக்கு, பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், இரண்டு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், பூங்கோதை, 40. மாற்றுத் திறனாளியான இவர், திருமணம் ஆகாததால், தனியாக வசித்து வந்தார். நேற்று காலை, மழை பெய்தபோது, குடை பிடித்தபடி, வீட்டை ஒட்டிய சந்து வழியாக, பூங்கோதை நடந்து சென்றார். செல்லக்கண்ணு என்பவரது பழைய ஓட்டு வீட்டருகே சென்ற போது, 15 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதில் பூங்கோதை, இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மெலட்டூர், மூன்றாம்சேத்தியைச் சேர்ந்த துரைகண்ணு, 70, என்பவர், தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை, ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், துரைகண்ணு இறந்தார். நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வல்லத்தில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 36 கடலோர கிராமங்களில் இருந்தும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்திலும், இரண்டு நாட்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளூர் கிராமத்தை, காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. முள்ளூர் கிராம மக்கள், கால்நடைகளுடன், தஞ்சை - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தியதால், மறியல் கைவிடப்பட்டது. பைக்கில் சென்றவர் பலி புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தசாமி, 50, என்பவர், நேற்று காலை, 11.00 மணிக்கு, பைக்கில் கடைவீதிக்கு சென்றார். அப்போது, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில், பைக் சிக்கியது. பைக்கில் இருந்து மழை நீரில் விழுந்த கந்தசாமி, வலிப்பு வந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

* திருச்சி மாவட்டம் முழுவதும், இரண்டு நாட்களாக, இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்திலும், தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழைநீர் தேங்கியது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X