சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சமையல் தொழிலாளிக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கள்ளிப்பட்டி, நல்லசாமி வீதியை சேர்ந்த அபிபுல்லா மகன் சாரு, 24, சமையல் தொழிலாளி. கடந்த, 2017 பிப்.,21ல் சத்தியமங்கலம் பகுதியில், பாட்டி வீட்டு முன் விளையாடிய, 10 வயது சிறுமியிடம் நைசாக பேசி, வீட்டுக்குள் அழைத்துச்

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சமையல் தொழிலாளிக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கள்ளிப்பட்டி, நல்லசாமி வீதியை சேர்ந்த அபிபுல்லா மகன் சாரு, 24, சமையல் தொழிலாளி. கடந்த, 2017 பிப்.,21ல் சத்தியமங்கலம் பகுதியில், பாட்டி வீட்டு முன் விளையாடிய, 10 வயது சிறுமியிடம் நைசாக பேசி, வீட்டுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். வெளியில் சென்றிருந்த பாட்டி வீடு திரும்பினார். உள்ளே சென்றவர் கூச்சல் போடவே, சாரு தப்பி ஓடினார். புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார், சாருவை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி மாலதி, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். சமையல் தொழிலாளி சாருவுக்கு ஏழாண்டு சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201916:37:49 IST Report Abuse
Mani . V பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் "ஆதாரம் இல்லை" என்று கூறி நிதிக்கு, நீதியை விற்பனை செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X