பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அளவிலான தடகளம்: 856 மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : டிச 01, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், சாமக்ரா சிக்?ஷா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், விளையாட்டு அரங்கில் நடந்தன. சி.இ.ஓ., முருகன் தலைமை வகித்தார். டி.இ.ஓ., கலாவதி முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 17, 19 ஆகிய இரண்டு வயது பிரிவில், 856 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தடகளத்தில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., ஓட்டப்போட்டி, 4து100 மற்றும் 4து400 தொடர் ஓட்டம் நடந்தது. மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. குழுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் குழுவை சேர்ந்த நரசிம்மன், நெப்போலியன், மகேந்திரன், சந்திராரெட்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X