பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த 30 யானைகள்

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனத்தில், 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்ட நிலையில், 30 யானைகள் தனியாக பிரிந்து, ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வன எல்லையான, ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு, கடந்த மாதம் இடம் பெயர்ந்தன. அங்கிருந்து, 30 யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, சில வாரங்களுக்கு முன்,

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனத்தில், 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்ட நிலையில், 30 யானைகள் தனியாக பிரிந்து, ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 150க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வன எல்லையான, ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு, கடந்த மாதம் இடம் பெயர்ந்தன. அங்கிருந்து, 30 யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, சில வாரங்களுக்கு முன், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. இந்நிலையில் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து மீண்டும், 70 யானைகள் பிரிந்து, தேன்கனிக்கோட்டை நொகனூர் காப்புக்காட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தன. வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வனத்தை விட்டு வெளியேறிய யானைகள், அஞ்செட்டி சாலையை கடந்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.இதனால் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகள் எண்ணிக்கை, 100 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து, 30 யானைகள் தனியாக பிரிந்து, ஓசூர் வனச்சரகம் சானமாவு வனப்பகுதிக்கு, நேற்று அதிகாலை வந்தன. தேன்கனிக்கோட்டையில் தற்போதுள்ள, 70 யானைகளும் எப்போது வேண்டுமானாலும், ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் அதிக யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய மக்கள், விறகு சேகரிக்க, கால்நடைகள் மேய்க்க, இரவு நேரத்தில் விவசாய நிலத்துக்கு செல்ல வேண்டாமென, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X