பொது செய்தி

தமிழ்நாடு

மாநில குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவர்களுக்கு பாராட்டு

Added : டிச 01, 2019
Share
Advertisement
சேலம்: மாநில அளவில், கல்லூரி களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டியில், வெற்றி பெற்ற சேலம் மாணவ, மாணவியரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடந்தது. சேலம், சோனா பொறியியல் கல்லூரி மாணவர் ஜெகன்னாத், சூப்பர் ?ஹவி வெயிட் பிரிவில் தங்கம், அதே கல்லூரி மாணவர் ஜீவா, லைட் வெயிட் பிரிவில்

சேலம்: மாநில அளவில், கல்லூரி களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டியில், வெற்றி பெற்ற சேலம் மாணவ, மாணவியரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடந்தது. சேலம், சோனா பொறியியல் கல்லூரி மாணவர் ஜெகன்னாத், சூப்பர் ?ஹவி வெயிட் பிரிவில் தங்கம், அதே கல்லூரி மாணவர் ஜீவா, லைட் வெயிட் பிரிவில் வெண்கலம், சேலம், ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, பாண்டம் பிரிவில் தங்கம் வென்றனர். ஜெகன்னாத், சிவரஞ்சினி ஆகியோர், டிசம்பரில் மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள அகில இந்திய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் போலீஸ் கமிஷனர் செந்தில் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X