சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், 100 கிலோவுக்கு மேல் தினமும் திடக்கழிவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, திருமண மண்டபம், ஓட்டல், பள்ளி, கல்லூரிகளிலிருந்து, ஜன.,1 முதல், திடக்கழிவு சேகரிப்பு நிறுத்தப்படும், என கமிஷனர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சியில், 350 டன் முதல், 450 டன் வரை திடக்கழிவு, தினமும் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தினமும், 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, திருமண மண்டபம், ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளில், கழிவுகளை தரம் பிரித்து, உரம் அல்லது உயிரி எரிவாயு உற்பத்தி அமைப்புகளை அமைக்க, கடந்த செப்., மாதம் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான தொழில்நுட்ப உதவியும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2020 ஜன.,1 முதல், 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் இடங்களிலிருந்து, திடக்கழிவு சேகரிப்பது முற்றிலும் நிறுத்தப்படும். அந்நிறுவனங்கள் உடனடியாக தங்கள் வளாகத்தில், உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும். மக்காத கழிவுகளை தரம் பிரித்து, மாநகராட்சி உலர் கழிவு சேகரிப்பு மையங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE