சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை கடத்தி கொலை செய்த 10 பேர் கைது

Added : டிச 01, 2019
Advertisement

வேலூர்: சென்னையில், கூலித்தொழிலாளியை கடத்தி கொலை செய்த, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தட்டச்சேரியை சேர்ந்தவர் முருகன், 50. இவர் மனைவி தேவகி, 45, இவர்களது மகன் கிருஷ்ணன், 25. முருகன் தன் குடும்பத்தினருடன் சென்னை தாம்பரம் மூகாம்பிகை நகரில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 22ல் லட்சுமிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு, முருகன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த கறுப்பு நிற பையில் ரூபாய் இருந்ததாகவும், அதை முருகன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அருண் தன் நண்பர்களுடன் முருகன் வீட்டுக்கு சென்று, அந்த பையில் தன்னுடைய, 10 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், தவறுதலாக பையை தொலைத்து விட்டதாகவும், அதை தரும்படி கேட்டார். பையை தான் எடுக்கவில்லை என, முருகன் கூறியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் அருணும், அவரது நண்பர்களும் துப்பாக்கி முனையில் முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை காரில் கடத்தி சென்று, பணம் இருந்த பையை தரும்படி அடித்து உதைத்து கேட்டுள்ளனர். தன் வீட்டின் எதிரில் உள்ள, காலி இடத்தில் பையை புதைத்து வைத்திருப்பதாக முருகன் கூறினார். அந்த இடத்தை தோண்டி பார்த்ததில் பணம் இல்லை. ஆத்திரமடைந்த அருண், அவரது நண்பர்கள் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கியதில் முருகன் இறந்தார். பின்னர் முருகன் சடலம் மற்றும் தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை காரில் ஏற்றி சென்றனர். சிறிது தூரத்தில் முருகன் உடலை வீசி விட்டு, வெளியே சொன்னால் உங்களையும் கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து வாழப்பந்தல் போலீசில் கடந்த, 27ல் கிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து, தாம்பரத்தில் பதுங்கியிருந்த அருண், 24, எழில், 25, சேகர், 25, முனியாண்டி, 25, விக்னேஷ், 25, கந்தன், 24, ஜானகிராமன், 30, குமார், 34, புரு?ஷாத்தமன், 25, பாரதி, 25, ஆகியோரை நேற்று அதிகாலை கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X