பொது செய்தி

இந்தியா

டாக்டர் பலாத்காரம்: தெலுங்கானாவில் 3 போலீஸ் சஸ்பெண்ட்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் பெண் டாக்டர் பணி முடிந்து திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் பரபரப்பு 10 அம்சங்கள் :1. தெலுங்கானாவில் பெண் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானாவில் பெண் டாக்டர் பணி முடிந்து திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil news
தெலுங்கானாவில் பரபரப்பு 10 அம்சங்கள் :1. தெலுங்கானாவில் பெண் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

2. இந்த விவகாரத்தில் விரிவாக விசாரணை நடத்தி, உரிய நேரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யாத 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3. குற்றவாளிகளை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என நூற்றுக்கணக்கானவர்கள் ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.


latest tamil news


4. சில்குர் பாலாஜி கோயிலில் புரோகிதர்கள் மற்றும் பக்தர்கள், நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து 20 நிமிடங்கள் கோயில் வாயில் கதவுகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

5. இந்த பலாத்கார சம்பவத்தை கண்டித்து தெலுங்கானா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானாவில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.


latest tamil news


6. உரிய நேரத்தில் போலீசார் தங்களின் புகாரை பெற்று, நடவடிக்கை எடுத்திருந்தால், தங்களின் மகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என பெண் டாக்டரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, எந்த போலீஸ் ஸ்டேஷனில் இது போன்று நடந்து கொள்ளக் கூடாது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் பொது மக்களின் புகார்களை பெற்று கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்ஐஆர் பிறகு பதிவு செய்து கொள்ளட்டும். முதலில் அப்பெண்ணை தேடுவதற்கு அவர்கள், குடும்பத்தினருக்கு உதவி இருக்க வேண்டும் என்றார்.

7. நவ.,27 அன்று இரவு அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு அப்பெண் தீவைத்து எரிக்கப்பட்டதும் முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

8. எரிந்த நிலையில் பெண் டாக்டரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என ஷம்சாபாத் போலீஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.


latest tamil news


9. கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து குற்றவாளிகள் 4 பேரும் அழைத்து வரப்பட்ட போது, வெளியில் கூடி இருந்த போராட்டக்காரர்கள் செருப்புகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

10. போலீசார் அதை தடுக்க முயன்றும் முடியாது போனதால், போராட்டக்காரர்கள் மீது அவர் தடியடி நடத்தி உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-டிச-201920:44:32 IST Report Abuse
Lion Drsekar குற்றவாளிகளை பொதுமக்கள்முன்னால் உடனடியாக தூக்கில் இட்டால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும், தற்போது இருக்கும் நடைமுறைகள் அனைத்துமே திருடர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது, விசாரணை விசாரணை என்று நீடிப்பதால் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கிறார்கள், இதை போக்க வேண்டுமென்றால் ஒரே வழி போக்குவரத்து காவலர்களைப்போல் நீதி அரசர்களையும் வேலைக்கு அமர்த்தி ஆங்காங்கு கண்காணிக்க செய்து எந்த ஒரு விசாறனையும் இன்றி நீராடியாக தண்டனை கொடுத்தால் குற்றம் குறையும், அமைச்சர்கள் பேசும்போது அருகில் அமர்ந்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கே பல லட்சம் கோடி பணத்தை பொது மக்கள் வாரி இறக்கும்போது நாட்டைக்காக்க நீதியரசர்களுக்கு கொடுப்பதில் பெருமையே . வந்தே மாதரம்
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
01-டிச-201915:19:36 IST Report Abuse
Nathan மேற்கண்ட மக்கள் போட்டோக்களில் ... இல்லை பார்த்தீர்களா, அதனை கொலை வெரி உபதேசம் கெட்டவர்கள்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
01-டிச-201914:40:59 IST Report Abuse
venkatan அன்று...டெல்லியில்.நிர்பயா...இன்று டாக்டர் ரெட்டி...அரசு தூக்கு தண்டனை தர வேண்டும்..இல்லையெனில் மக்கள் தங்களை பாதுகாக்க துப்பாக்கியுடன் சட்டதையும் கையில் எடுக்க வேண்டிவரும்.காவல் மற்றும் நீதித்துறைக்கு பெரிய இழுக்கு. பெண்ணாக பிறந்ததற்கு இந்த இழிவா? ஒருநாள் பாலியல் வல்லுறவாளர்கள் அனைவரும் எரிக்கப்பட வேண்டும்.போங்கடா உங்க ஜனநாயகமும் சட்டங்களும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X