பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : டிச 01, 2019
Advertisement

அரசு பள்ளி எதிரே சுகாதார சீர்கேடு: குமாரபாளையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள சாலையில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இந்த பள்ளியின் எதிரில் அதிகளவில் குப்பை கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, உத்தரவிட வேண்டியது அவசியம்.

- கே.எஸ்.செந்தில்குமார், குமாரபாளையம்.

கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவரா? வெண்ணந்தூர், அரசு மருத்துவமனையில், தினமும், 100க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் நீண்டநேரம் காத்திருந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இதனால், கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து,பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

- கே.சிங்காரம், வெண்ணந்தூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X