பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Tamilnadu, HeavyRain, Weather, தமிழகம், தமிழ்நாடு, மழை, கனமழை, பாதிப்பு

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகம் முழுவதும பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை கொட்டித்தீர்க்கிறது. இதனால், ஏரிகள், அணைகள் நிரம்பி வருகிறது. பெரும்பாலான இடங்களில் விடாமல் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது.

இன்றும் (டிச.01) பரவலாக பலத்த மழை பெய்தது. மதுரை, சென்னை, கோவை, குமரி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பலத்த மழையின் காரணமா பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் 11 செ.மீ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் அதிக பட்சமாக 10 செ.மீ., மழை பதிவானது. நீடாமங்கலம், முத்துப்பேட்டையில் 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ., மழை பதிவானது.

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வந்தவாசி, நெற்குணம், தொள்ளார், கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை, மயிலை பகுதிகளிலும் மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளிலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.கடலூர்

கடலூரை பொறுத்தவரை நேற்று (நவ.,30) ஒரே நாளில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றி வருகின்றனர். அதே போல், விருத்தாச்சலத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது, மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.செங்கல்பட்டு


செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருகின்றனர்.

முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியிலும் வெள்ளநீர் தெருக்களில் சூழ்ந்துள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மடிப்பாக்கம் பகுதியில் தாழ்வான வீதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

காஞ்சி, சுங்குவார்சத்திரம் அருகே ஜம்போடை ஏரி உடைந்து, நீர் வெளியேறி வருகிறது.


பயிர்கள் சேதம்


தூத்துக்குடியில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியவில்லை. பேருந்து நிலையம் தண்ணீரில் மதிக்கிறது. முக்கிய குளங்கள் நிரம்பி வழிகின்றன.

திருவாரூரில், தொடர் மழை காரணமாக 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது.

நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் பகுதிகளில் கடல்சீற்றம் மற்றும் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1000 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.


உதவி எண்கள்


சென்னையில் மழை பாதிப்பு குறித்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01-டிச-201914:47:18 IST Report Abuse
Natarajan Ramanathan நேற்றைய ஒருநாள் மழைக்கே சென்னை நாறிவிட்டது. எங்குபார்த்தாலும் டிராபிக் ஜாம் ஆகி மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
01-டிச-201919:03:50 IST Report Abuse
madhavan rajanகாரணங்கள் .. சாலை சாய்வாக இருக்கிறது. சாய்வு இறங்கும் இடத்தில் தண்ணீர் போக வழியில்லை. நடுவில் தடுப்பு மேடாக இருப்பதால் இருபுறமும் தண்ணீர் சாலையின் ஓரத்திற்கு சென்று அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. சாலை ஓரத்தில் பள்ளம் இருப்பதே பல இடங்களில் தெரிவதில்லை. சாலை ஓரம் மழைநீர் செல்லவேண்டிய இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது. பல இடங்களில் கனரக வாகனங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரில் செல்வதால் சாலைகள் பழுது அடைந்து சிறிய வாகனங்கள் தள்ளாடும் நிலை. மற்றும் பல....
Rate this:
Share this comment
Cancel
01-டிச-201913:08:40 IST Report Abuse
சஹானா     சென்னை swiggy deivery boys food deliveryம் பாதிப்பு i like swiggy delivery boys
Rate this:
Share this comment
Cancel
01-டிச-201912:04:10 IST Report Abuse
நக்கல் கன மழையில் அவதிப்படும் குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ரூ2000 வழங்கப்படும்... இந்த செய்தி வந்தால் ஆச்சர்யப்படாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X