பொது செய்தி

இந்தியா

பயம் வேண்டாம்: தொழிலதிபர்களுக்கு அமித்ஷா அறிவுரை

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (30)
Advertisement
Amit Shah, India Inc, பயம் வேண்டாம், தொழிலதிபர், அமித்ஷா அறிவுரை

இந்த செய்தியை கேட்க

மும்பை: வரி நிர்வாகத்தை கண்டு, தொழிலதிபர்கள், தொழில்துறையினர் அஞ்ச தேவையில்லை. நிர்வாகத்தை சுத்தப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பேசுகையில், வங்கி மற்றும் வரித்துறையில் தவறு செய்தவர்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை நிர்வாகத்தில் நடந்த தவறுகளை சரி செய்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்தோம். இந்த நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. இது சரி செய்யப்பட வேண்டும். இருப்பினும், மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, பொருளாதாரம் வெளிப்படைத் தன்மையுடையதாக மாறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை, தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன் சரி செய்யப்படும். சுய நம்பிக்கையுடன், இந்த தேக்கத்திலிருந்து மீண்டு வருவோம். சர்வதேச மந்தநிலை தற்காலிகமானது. இதிலிருந்து நாம் மீண்டு விடுவோம். கடந்த காலங்களில் அதனை செய்துள்ளோம். வலுவான இந்திய சந்தையும், தொழில்துறையும், தேக்கத்திலிருந்து வலுவாக மீண்டு வரும். தொழில்தறையினருடன் நாங்கள் உள்ளோம். உங்களின் கவலைகளை தெரிவியுங்கள்.

விரைவில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக தொழில் செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடத்துள்ளது. அரசை கண்டு பயப்பட தேவையில்லை. எங்களை பற்றி ஏராளமான விஷயங்கள் எழுதப்பட்டன. யாரும் அஞ்ச தேவையில்லை. எங்களை கண்டு பயப்பட வேண்டிய அளவுக்கு நாங்கள் எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-டிச-201911:07:30 IST Report Abuse
ganapati sb seer ketta niravagathai sepanital muthalil sila sangadandangal uruvaagi pinnar nilamai membadum ithu iyalbe
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-201923:51:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் விரைவில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-டிச-201920:32:21 IST Report Abuse
Lion Drsekar ஐயா உங்களுக்கு என்ன நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள் மேலும் பதவி பறிபோனாலும் ஓய்வு பெற்றாலும் வாழ்நாள் முழுவதும் பென்சன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேறு என்ன குறை, ஆனால் இங்கு அப்படியா ? தயவு செய்து குழந்தை பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை அனைவரும் தினம் தினம் ஒவ்வொரு துறைக்கும் கொடுக்கும் லஞ்சத்தை , மிரட்டி வாங்கப்படும் லஞ்சத்தை கணக்கிட்டால் நீங்கள் பதவிக்கு வருவதற்கு முன்பு கூறினீர்கள் ஸ்விஸ்ஸ் கங்கிக்கணக்கு என்று அதை விட பல மடங்கு இங்கு இருக்கிறது, ஆகவே நீங்கள் கொருவது செய்திக்கு நன்றாக இருக்கிறது ,ம் சரி ஒன்றே ஒன்று பொது மக்கள் தங்களுக்கு எத்தினை லட்சம் கடிதம் எழுதுகிறார்கள் என்றைக்காவது ஒரு நாள் உங்கள் அல்லது மற்ற துறைகளிடமிருந்து அவர்களுக்கு சாதகமாக பதில் வந்திருக்கிறதா? பயம் இருக்கட்டும் , முதலில் வரி என்பதை ஒரே ஒரு வாரியாகப் போட்டுக்கொண்டு மொத்தமாக மத்திய மாநில அரசுகள் பங்கிட்டுக்கொள்ளட்டுமே ? சாலை வரி, சுங்க வரி, வீடு வரி, குடிநீர் வரி, குடிநீர் சார்ஜ் , மின்சார பயன்பாட்டுக்கு வரி, காசுக்கு வரி, விளம்பரப்பலகைக்கு வரி, ஹோட்டலுக்கு சென்றால் வரி, விடுதியில் தங்கினால் வரி, வியாபாரம் செய்தால் வரி, தொழில் வரி, தொழிலார் னால வாரிய வரி, பி எப் வரி, பெட்ரோலுக்கு வரி, டீசலுக்கு வரி, தற்போது வரி வாங்காதது பிறப்புக்கும் இறப்புக்கும் அதற்க்கு பதிலாக லஞ்சமாக வாங்குகிறார்கள், இப்படி இருக்க ஒவ்வொரு துறைக்கும் தினம் தினம் அனைவரும் பயந்து பயந்து பல இறக்கின்றனர் சிலர் இறந்து கொண்டு இருக்கின்றனர், எல்லோரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால் எதற்குமே பயப்படவேணாமே. தவறாக கூறவில்லை, நீங்கள் என்று இல்லை இன்றைக்கு வியாபார துறைகளில் கொடிகட்டிப் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் குறிப்பாக குடும்ப தலைவர்களின் வாரிசுகள் மட்டுமே, மற்றவர்கள் அவர்களைப்போல் வரலாம் என்று நினைத்து கலந்ததுதான் அதிகம், இதுதான் உண்மையும், வாழ்த்துக்கள் தங்களது அறிவுரைக்கு, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Charles - Burnaby,கனடா
01-டிச-201921:33:48 IST Report Abuse
Charlesமிகவும் சரியான ஒரு கருத்து. மிக சுருக்கமாக சொல்லிவிட்டிர்கள். இவர்கள் எடுத்த நடவடிக்கைகளில் எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டு நாட்டுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள். வெறும் பேச்சு தான் மிச்சம். இவ்வளவு பெரிய நாட்டிற்கு ஒரு எகானாமிஸ்ட் தான் நிதி மந்திரியாக வரவேண்டும் , மற்றவர்களுக்கு அந்த தகுதி கிடையாது. யார் தலைமை சொல்வதை செய்கிறார்களோ அவர்களைத்தான் பிஜேபி அமர்த்தியிருக்கிறது ஒரு முக்கியமான பொறுப்பில்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X