பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

Added : டிச 01, 2019
Advertisement

நாமக்கல்: அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக, 'பிரதான் மந்திரி சரம் யோகி மான்தான்' வணிகர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், வரும், 6 வரை, ஓய்வூதிய வாரவிழாவாக, உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள், மாவட்டந்தோறும் நடத்தப்படுகின்றன. அதற்கான சிறப்பு விழா, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆணையர் ஞானவேல் தலைமை வகித்தார். துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், பொது வைப்பு நிதி திட்ட சேலம் மண்டல அமலாக்க அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர். இத்திட்டத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். சிறப்பு பதிவு முகாம், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வரும், 6 வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X