சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றி பதிவு திருமணம்: வாலிபர் மீது பட்டதாரி பெண் புகார்

Added : டிச 01, 2019
Advertisement

மோகனூர்: ப.வேலூர் அடுத்த இருக்கூர் ஊராட்சி, வடக்கு வலசுபாளையத்தை சேர்ந்த வேலுசாமி மகள் சந்தியா, 23. பட்டதாரியான அவர், மோகனூரில் போலீசில் அளித்த மனு விபரம்: ப.வேலூர், ஜேடர்பாளையம் அடுத்த சின்னாம்பாளையத்தை சேர்ந்த இளங்கோவன், 25, கடந்த, நான்கு மாதங்களாக பேசி வந்தார். திடீரென திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டார். என் பெற்றோரிடம் வந்து பெண் கேட்க அறிவுறுத்தினேன். ஆனால், அக்., 18ல் என்னை, மோகனூர் வரும்படி கூறினார். அங்கு வந்த என்னை, சார் -பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, கையெழுத்திடச் சொன்னார். நானும் கையெழுத்திட்டேன். அதையடுத்து, 'நமக்கு திருமணம் நடந்துவிட்டது. அதை பதிவு செய்துவிட்டேன். இனிதான், உன் பெற்றோரிடம் உன்னை பெண் கேட்க வேண்டும்' என்றார். என் பெற்றோரிடம் உள்ள சொத்துக்கு ஆசைப்பட்டு, என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அவர் மீதும், அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இளங்கோவன், திருமணத்துக்கு உதவி செய்த சுப்ரமணி, சண்முகம் உள்பட, 10 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X