பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிபாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

Added : டிச 01, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டார். ஜீவா ?ஷட் பின்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி புதிய கட்டடம், ஆவாரங்காடு கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி அமைத்தல் மற்றும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி. கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, 23.21 லட்சத்தில் மூன்று வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 15 லட்சம் ரூபாயில் சைக்கிள் நிறுத்தும் கூடம். கவுண்டன்புதூரில், 8.80 லட்சம் ரூபாயில், அங்கன்வாடி புதிய கட்டடம் உள்பட, மொத்தம், 77.89 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பூமி பூஜை செய்து அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார். பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X