பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : டிச 01, 2019
Advertisement

குப்பை குவிப்பு; சுகாதார சீர்கேடு: நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் எரிவாயு தகன மேடை மயானம் உள்ளது. அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், எதிர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பை குவிக்கப்படுகிறது. அது நாளுக்குநாள் அதிகரித்து அருகே செல்லும் மெகா சைஸ் சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. அதனால், துர்நாற்றம் வீசுவதோடு சுற்று வட்டார குடியிருப்போர் மற்றும் வர்த்தக நிறுவனத்தில் உள்ளோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மண் சரிவால் ஓட்டுனர்கள் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், ஆத்துமேடு பஸ்நிறுத்தம் அருகே, கடந்த பல ஆண்டுகளாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிடும் நோக்கில் சாலையை விட்டு சற்று தள்ளி சென்றால், மண்சரிவில் தடுமாறுகின்றனர். பொதுமக்களும் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும்போது, தவறிவிழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். மண்சரிவை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மைப் பணி மேற்கொள்ளணும்! பள்ளிபாளையம், வி.ஏ.ஓ., அலுவலக பின்புறத்தில் கழிவு, குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும், அலுவலகத்திற்கு வரும் மக்களும் அவதிப்பட்டனர். இதனால், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. கடந்த, ஓரிரு நாட்களாக மீண்டும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன.

சாலையோர பள்ளம்; சீரமைக்க கோரிக்கை: குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிரில் அதிகளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து நடக்கிறது. இங்குள்ள, கோம்பு பள்ளம் பாலம் அருகே சாலையோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது நாளாக, நாளாக மண் சரிவு ஏற்பட்டு பெரிதாகி வருகிறது. கன ரக வாகனங்கள் செல்லும் போது இந்த பள்ளம் உள்ள பகுதி மேலும் சேதமாகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர்.

நாய் தொல்லை; மக்கள் அச்சம்: பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையத்தில் சாலையில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூ விலரில் செல்லும் வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிறிது கவனம் குறைவாக வந்தால், நிலை தடுமாறி கீழே விழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்தில் எப்போதும் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X