பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப தர்ம பிரசாரம் அணையா தீப ரத யாத்திரை

Added : டிச 01, 2019
Advertisement

குமாரபாளையம்: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை நேற்று குமாரபாளையம் வந்தது. ரதத்தில் சபரிமலை ஐயப்ப சன்னதியின் கருவறையிலிருந்து ஏற்றப்பட்ட ஜோதி அணையா தீபமாக வைக்கப்பட்டுள்ளது. பல வீதிகளின் வழியே வந்த இந்த ரதத்தை, ஏராளமான பக்தர்கள் வணங்கினர். ராமர் கோவிலில் இந்த ரதத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த யாத்திரையின் போது பெண்கள் இந்த அணையா தீபத்திலிருந்து, தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த விளக்குகளில் ஏற்றிச் சென்று வணங்கி வருகின்றனர். இதுகுறித்து, ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'ஐயப்ப சுவாமியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், அணையா விளக்கை தரிசிக்கும் பொதுமக்களுக்கு சுபிட்சம் ஏற்படவும் இந்த ரத யாத்திரை நடக்கிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X