நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட சுவாமிநகர், முத்தமிழ் நகர் மற்றும் போதுப்பட்டியில் தார்ச்சாலை, மதுரைவீரன்புதூர் பகுதியில், புதிய வடிகால் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அதற்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்து, பணியை துவக்கி வைத்தார். மேலும், போதுப்பட்டி, கருப்பட்டிப்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளி, காவேட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பராமரிப்பு பணி, புதிய கட்டடங்கள். சுண்ணாம்புகார தெரு முதல், நடராஜபுரம், நான்காவது தெரு வரை, ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சாலை சீரமைப்பு பணி என, மொத்தம், 2.84 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.