பொது செய்தி

தமிழ்நாடு

சமூக பங்களிப்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணி: மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு

Added : டிச 01, 2019
Advertisement

நாமக்கல்: ஒவ்வொரு தனி நபரும், எச்.ஐ.வி., இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில், டிச.,1 (இன்று)உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
'சமூக பங்களிப்பு மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்' என்ற கருத்தை, 2019ம் ஆண்டில், மையக்கருத்தாக கொண்டு, இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான், எச்.ஐ.வி., உள்ளோரை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள், கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில், எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறையினர் கூறியதாவது: கடந்த, 2016-17 ம் ஆண்டு, கர்ப்பிணிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி, எச்.ஐ.வி., தொற்றின் நிலை, நாமக்கல் மாவட்டத்தில், 0.50 சதவீதம், தமிழகத்தில், 0.27 சதவீதம், இந்திய அளவில், 0.28 சதவீதம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில், கடந்த, அக்., வரை, 7,286 பேர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லிமலை, மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ப.வேலூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வினைதீர்த்தபுரம் ஆகிய, 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இணை ஏ.ஆர்.டி., மையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், 10 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டால், அதில், 25 பேர் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களுக்கு, கூட்டு மருந்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு குறித்து, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 53 செஞ்சுருள் சங்கங்கள், மாவட்டத்தில், பல்வேறு கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டு, 6,300 மாணவ, மாணவியர் தன்னார்வ உறுப்பினர்களாக உள்ளனர். ஒதுக்குதல் மற்றும் புறக்கணிப்புகளை அறவே ஒழிக்கும் நோக்கில், அதிகப்படியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம், நாமக்கல் மாவட்டம், 2016ல், முதல் இடத்தில் இருந்து, ஐந்தாம் இடத்துக்கு சென்றது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X