பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் தத்கல் மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி தகவல்

Added : டிச 01, 2019
Advertisement

பள்ளிபாளையம்: ''விவசாய மின் இணைப்பு பெற, தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு, இம்மாதம் முதல் இணைப்பு வழங்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில், திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த, மின் துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: விவசாய மின் இணைப்பு பெற, தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு, இம்மாதம் முதல் இணைப்பு வழங்கப்படும். அதன்படி, ஆண்டுதோறும், 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. நிலக்கரி மாதம், 75 ஆயிரம் மெட்ரிக் டன் வரவேண்டும். தற்போது, 50 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வருகிறது. நிலக்கரி வரத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணிகளுக்கு, விரைந்து அனுமதி வழங்கக்கோரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி தடை நீக்கம் மையம் வழியாக மக்களிடம் இருந்து புகார் பெற்று, உடனுக்குடன் மின் தடை சரிசெய்யப்படுகிறது. இதற்காக, 1912 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X