கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

Added : டிச 01, 2019
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், பொதுக் கிணற்றில் செத்து மிதக்கும் மீன்களால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மல்லசமுத்திரம் பேரூராட்சி, சந்தைப்பேட்டையில் பொதுக் கிணறு உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, இக்கிணற்றில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. அருகில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததா, மர்ம நபர்கள் வெடி மருந்து வீசி மீன்கள் இறந்ததா அல்லது வேறு காரணமா என, தெரியவில்லை. மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X