தடுப்புச்சுவரில்லாத வடிகால்: விபத்து அச்சத்தில் மக்கள்

Added : டிச 01, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அருகே, ராமாவரம்புதூரில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் வழிபாட்டுத்தலங்கள், தனியார் கல்லூரி, ரேஷன் கடைகள், தனியார் மருத்துவமனை, டயர் கம்பெனிகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவங்கள் உள்ளன. நாமக்கல்-சேலம் சாலையிலிருந்து, ராமாவரம்புதூர் செல்லும் சாலையில், ஐந்து அடி அகலத்திலும், ஆறடி உயரம் கொண்ட சாக்கடை வடிகால் உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், பெரும்பாலும் இதன் மூலமாக குட்டைத்தெரு வழியாக சேந்தமங்கலம் சாலையில் உள்ள குட்டைக்கு செல்லும். இந்நிலையில் அந்த சாக்கடைக்கு தடுப்புச்சுவர் இல்லாமல் சாலை மட்டத்தில் உள்ளதால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் அந்த சாக்கடையில், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாக்கடை இருப்பதே தெரியாமல் அதனுள் விழுந்து படுகாயமடைந்து சென்ற நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருகிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X