கரூர்: க.பரமத்தி அருகே, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் என, 14 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்தில் காயமடைகிறவர்களுக்கு, முதலுதவி அளிப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, எஸ்.பி., பாண்டியராஜன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று, க.பரமத்தி ரங்கநாதபுரம் பிரிவு அருகே விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சாலை விதிமுறைகள், ஓட்டுனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன், அளிக்கப்பட வேண்டிய முதலுதவி குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, போலீஸ் எஸ்.ஐ., க்கள் பெரியசாமி, ராஜேந்திரன், திருப்பதி மற்றும் போலீ சார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE