காஸ் சிலிண்டர் விற்பனை நிலையம்: போக்குவரத்து அமைச்சர் திறந்து வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் விற்பனை நிலையம்: போக்குவரத்து அமைச்சர் திறந்து வைப்பு

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019
Share
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகில், பஞ்சப்பட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் காஸ் சிலிண்டர் விற்பனை நிலைய திறப்பு விழா நடந்தது. போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய எரிவாயு இணைப்புகளுக்கான ஆணை, ஐந்து பேருக்கு, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், ஐந்து சுயஉதவிக் குழுக்களுக்கு, 12.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகில், பஞ்சப்பட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் காஸ் சிலிண்டர் விற்பனை நிலைய திறப்பு விழா நடந்தது. போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய எரிவாயு இணைப்புகளுக்கான ஆணை, ஐந்து பேருக்கு, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், ஐந்து சுயஉதவிக் குழுக்களுக்கு, 12.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். முன்னதாக, ஜவஹர் பஜாரில் உள்ள கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான இடத்தில், 46 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தானியங்கி கிடங்கு அமைப்பதற்கும், 1.14 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கும், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் காந்திகிராமம் பகுதியில் உள்ள பூங்கா புனரமைப்பு பணியையும் தொடங்கி வைத்தார். கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ., கீதா, சப் - கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X