பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் பெய்த சாரல் மழை

Added : டிச 01, 2019
Advertisement

கரூர்: கரூர் நகரில், நேற்று சாரல் மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, கரூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து, மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 3, அரவக்குறிச்சி, 22, அணைப்பாளையம், 3, க.பரமத்தி, 3, குளித்தலை, 6, தோகமலை, 4, கிருஷ்ணராயபுரம், 2, மாயனூர், 2, பஞ்சப்பட்டி, 4, கடவூர், 11.2, பால விடுதி, 15.1, மயிலம்பட்டி, 7 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.86 மி.மீ., மழை பதிவானது.


* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 755 கன அடி தண்ணீர் வந்தது. ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 64.47 அடியாக இருந்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு வினாடிக்கு, 6,410 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 5,640 கன அடியும், நான்கு கிளை வாய்க் காலில், 770 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


* கரூர் கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 40 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.87 அடி யாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில், 130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X