பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் ஆலைக்கு 4 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

Added : டிச 01, 2019
Advertisement

கரூர்: நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகள், டால்மியா சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அரசு தடை செய்துள்ளது. இதன் விற்பனை, இருப்பு வைத்தல், பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில், தூய்மையே சேவை என்ற திட்டத்தின் மூலம், துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிராமங்களில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில், 150 வீடுகளுக்கு ஒருவரும், குடியிருப்புகள் பரவலாக உள்ள பகுதிகளில், 75 வீடுகளுக்கும் ஒருவரும் என தூய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு தினமும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து தூய்மைப்பணிகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, மட்கும் குப்பை, மட்காத குப்பையை தரம் பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரித்தெடுத்த குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பிளஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மட்காத குப்பையை, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பேட்டை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த, நான்கு டன் பிளஸ்டிக் கழிவுகள் பாதுகாப்பாக அழிக்க, டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் ஆலையின் எரிகலனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X