அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையீடு: நக்வி எதிர்ப்பு

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அயோத்தி, தீர்ப்பு, நக்வி, உச்சநீதிமன்றம்,மேல்முறையீடு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அயோத்தி நில விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது, சமூகத்தில் பிரிவினையையும், மோதலையும் உருவாக்கும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

அயோத்தி, ராமஜென்மபூமி நில விவகாரத்தில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் எனவும், முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக, ஜாமியத் உலேமா இ ஹிந்து அமைப்பும், முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளன.




இது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது : ''அயோத்தி நில விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தால், சமூகத்தில் பிரிவினையும் மோதலும் தேவையில்லாமல் உருவாகும். ஜனநாயகத்தில், ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை கூறவும், நீதிமன்றத்தை நாடவும் உரிமை உள்ளது. ஆனால், நூற்றாண்டு காலமாக சிக்கலில் இருந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் அனைவரும் ஏற்கும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பை அனைவரும் ஏற்கிறார்கள். மதிக்கிறார்கள். ஆனால், இந்த தீர்ப்புக்கு பின் ஒற்றுமை பலமாகி இருக்கிறது என்ற உண்மையை சிலரால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால், சீராய்வு மனு என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினையையும், மோதலையும் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது சமூகத்தால் ஏற்கப்படாது. தனிப்பட்ட சிலரின் குரல்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகாது. அனைத்து தரப்பினரின்உணர்வுகளும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இருப்பவர்கள் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ளாவிட்டால், நீதிமன்றம் ஏற்கனவே அளித்த சமரசம் என்ற வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாமே. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஹிந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் ஏற்று கொண்டுள்ளார்கள். சீராய்வு மனு தாக்கல் செய்ய போகிறோம் என்பவர்கள், தொடக்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றனர். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை . தற்போது எதிரான நிலையை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
01-டிச-201921:17:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இதெல்லாம் வக்கீல் பிழைப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளார் எந்த வக்கீலோ தனவானாக நினைக்கிறார் . கடவுள் இவர்களை மன்னிக்கனும் ....அல்லா என்செய்வார் ....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-டிச-201916:15:13 IST Report Abuse
அம்பி ஐயர் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் மற்றும் இதரர்களின் பண உதவி.... தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
01-டிச-201915:13:59 IST Report Abuse
blocked user ஆக்கிரமித்த இடத்துக்கு வேறு இடம் கொடுப்பது இந்திய நீதித்துறை தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தும் ஒரு பிரிவுக்கு திருப்தி இல்லை நாம் என்ன செய்யமுடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X