பொது செய்தி

இந்தியா

நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (16)
Advertisement
GST, Revenue, Collection, November, ஜிஎஸ்டி, வசூல், நவம்பர், வருவாய், நிதியமைச்சகம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,03,942 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஜூலைக்கு பின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டுவது இது 8 வது முறையாகும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின்னர், அதிக வருவானம் கிடைத்த மாதங்களில் 3வதாக நவம்பர் மாதம் உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஏப்ரல் மற்றும் 2019 மார்ச்சில் அதிக வருமானங்கள் கிடைத்திருந்தது.

நவம்பர் மாதம் வந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,03,492 கோடியில்,
சி ஜிஎஸ்டி - ரூ.19,592 கோடி
எஸ் ஜிஎஸ்டி - ரூ.27,144 கோடி
ஐஜிஎஸ்டி - ரூ. 49,028 கோடி
செஸ் - ரூ.7,727 கோடி அடங்கியுள்ளது.

கடந்த 2 மாதமாக எதிர்மறையான வளர்ச்சி இருந்த நேரத்தில், தற்போது ஜிஎஸ்டி வருமானம் 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த நவம்பரில் உள்நாட்டு பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்த ஜிஎஸ்டியில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியில் கிடைக்கும் ஜிஎஸ்டி தொடர்ந்து எதிர்மறை சதவீதமாக உள்ளது. நவம்பரில் -13 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த அக்டோபர் மாதம் இது -20 சதவீதமாக இருந்தது.அக்டோபர் முதல் நவ.,30 வரை 77.83 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3 பி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருமானம் ரூ.95,380 கோடி ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் ரூ.91,916 கோடியாக இருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
01-டிச-201921:40:14 IST Report Abuse
PANDA PANDI thiru ஒளரக்கூடாது. மக்கள் கொடுத்த இரும்பிலும் பணத்திலும் கட்டப்பட்டது என்று நீர் சொல்வது உண்மைக்கு புறம்பான கருத்து.. குஜிஜு அரசாங்கத்தின் அறிக்கை படிக்கவும். your ஹொனோர். COMEDY யாக உள்ளது உங்கள் கருத்து. விட்ட வானத்தில் இருந்து வந்தது என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். வாய் சாடல் கட்சி உறுப்பினர்.. ஐயோ ஐயோ..கொடுமை
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
01-டிச-201917:26:03 IST Report Abuse
Believe in one and only God ராமர் சிலைக்கு மட்டும் தேவையான 2500 கோடி பணம் ரெடி. சிலைக்கு செலவு செய்தே நாட்டை வறுமையாக்கும் அரசு
Rate this:
Share this comment
Thiru - Chennai,இந்தியா
01-டிச-201920:22:38 IST Report Abuse
Thiruஇப்படித்தான் நிறைய பேர், கடலில் கட்டுமரத்தான் கூட்டம், கூவிக்கொண்டே இருக்கும். சர்தார் வல்லபாய் படேலுக்கு மக்கள் கொடுத்த இரும்பிலும் பணத்திலும் கட்டப்பட்டதை அரசு பணத்தில் கட்டப்பட்டது என்று பொய்யுரைத்த வாய் இப்படித்தான் பேசும். ஒரு நாட்டை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை திருடர் முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டு ஓசிசோறு கட்சிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனாலும் திருடர் கழகம், திருடர் முன்னேற்ற கழகமும் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை நண்பரே....
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
01-டிச-201915:38:46 IST Report Abuse
muthu Rajendran பக்கோடாவிற்கு 12 தீப்பெட்டிக்கு 18 சதவீதம் வரி போட்டால் ஏன் ஒரு லட்சம் கோடி வராது
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
01-டிச-201915:58:26 IST Report Abuse
blocked userஎல்லோரும் தினம் நூறு தீப்பெட்டியா வாங்குகிறீர்களா இல்லை பக்கோடாதான் இந்தியாவின் தேசிய உணவா... ஏன் இப்படி ஒரு கொலவெறி.....
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201916:04:34 IST Report Abuse
Janarthananஎன்னடா பிச்சை எடுக்கிட்டு இருக்கிறேன் என்று நேற்று திரிந்தீர்கள்?? இன்னைக்கு நாங்க பகோடா நிறைய சாப்பிடததால் gst அதிகமாக வந்து விட்டது என்று கூறுகிற?? டுமிழன் ஒரு ஸ்பெஷல் டிசைன்??? சரக்கு சைட் டிஷ் பிடிச்சது பகோடா தானே??...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-டிச-201917:02:32 IST Report Abuse
Cheran Perumalஉண்டியல் குலுக்கிவிட்டு வந்து படுத்த களைப்பில் கண்ட கனவு இது. இந்த நாட்டில் கனவு காணக்கூட உரிமை இல்லையா என்ன?...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
01-டிச-201917:19:44 IST Report Abuse
Rajasமக்களிடம் உண்டியல் குலுக்கி எதையும் கேட்கலாம். தப்பே இல்லை. ஆனால் கார்பரேட்டுகளிடம் 1000 ரூபாய் நன்கொடை வாங்கி விட்டு அதற்க்காக 1 கோடி அரசு சலுகைகள் தான் தரக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X