பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பு வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை; உள்துறை இணை அமைச்சர்

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (19)
Advertisement
NityanandRai, BSF, Jawans, 100Days, நித்யானந்த்ராய், பாதுகாப்புபடை, இணைஅமைச்சர்

புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் விடுமுறை அளிக்க வலியுறுத்துவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

டில்லியில் எல்லை பாதுகாப்பு படையின் 55வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டில்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டில்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.




பின்னர் நித்யானந்த் ராய் பேசுகையில், துணை ராணுவத்தினருக்கு உள்ளது போல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்திருப்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை அளிக்க என்னால் இயன்ற அளவு அரசிடம் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
02-டிச-201911:57:25 IST Report Abuse
 Sri,India நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தொடர் விடுமுறையாக இருபது நாட்கள் விடுமுறை கொடுக்கலாமே? அதே போல தென் மாவட்ட இளைஞர்களை மது போதையில் இருந்து நல்வழிப்படுத்தி சம்பாதிக்கும் எண்ணத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கடற்படை, ராணுவத்தில் சேர இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-டிச-201904:11:03 IST Report Abuse
 nicolethomson வந்து ஒரு பயிர் செய்து அப்பா அம்மாவிற்கும் உதவலாம் என்று நினைக்கும் ராணுவ வீரர்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
02-டிச-201900:03:37 IST Report Abuse
ராஜேஷ் இப்படியே சுத்தி எல்லாரையும் பகைத்துக்கொண்டும் பொதுமக்களை பெருக்கியாக மாற்றியும் . எண்ணற்ற நாட்டுமக்கள் வரிப்பணத்தை அரசியல் வியாதிகள் பங்குபோட்டது போக மீதியை ராணுவ வீரர்களுக்கும் , போலீஸ்க்கும் பிரித்து குடுத்துடுங்க . கொள்ளை கூட்டடமும் திருடினால் இப்படிதான் பங்குபோட்டுக்கொள்ளும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X