முதல்வராக மீண்டும் வருவேன்; பட்னவிஸ் உறுதி

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
Maharashtra, UddhavThackeray, Fadnavis, LuckyCM, மஹாராஷ்டிரா, உத்தவ்தாக்கரே, தேவேந்திரபட்னவிஸ், அதிர்ஷ்டம்

இந்த செய்தியை கேட்க

மும்பை: மும்பை : ''முதல்வராக மீண்டும் வருவேன். சில காலம் பொறுத்திருங்கள்'' என மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பட்னவிஸ் கூறினார்.

மஹா., மாநிலத்தில் காங்., தேசியவாத காங்., கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். நேற்று (நவ.,30) நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மை நிருபிக்கப்பட்டு சிவசேனா வெற்றி பெற்றது.


எதிர்க்கட்சி தலைவர் தேர்வுஇந்நிலையில், சபாநாயகராக காங்.,சின் நானா படோல், பா.ஜ.,வின் கிஷன் கதோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடைசி நேரத்தில் கிஷன், வாபஸ் பெற்றதால் நானா படோல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.


துரோகம் செய்யவில்லைlatest tamil news


எதிர்கட்சி தலைவருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்தி பேசுகையில், பட்னவிசை நான் எதிர்கட்சி தலைவராக பார்க்கவில்லை. பொறுப்புள்ள தலைவராக பார்க்கிறேன். என் நண்பரான அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். என் மனதில் உள்ள இந்துத்துவா சித்தாந்தத்தை ஒருபோதும் விடமாட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக பட்னவிஸ் அரசுக்கு உறுதுணையாக இருந்தேனே தவிர துரோகம் செய்யவில்லை.


அதிர்ஷ்டக்காரன்latest tamil news


அவர்கள் எங்களுடன் நட்பாக இருந்திருந்தால் இருகட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டிருக்காது. நான் உண்மையில் அதிர்ஷ்டக்கார முதல்வர் தான். என்னை எதிர்த்தவர்கள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். நட்பாக இருந்தவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். அதிர்ஷ்டத்தாலும், மக்களின் ஆசியுடனும் முதல்வராக வந்திருக்கிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.


மக்கள் உத்தரவு


பின்னர் பட்னவிஸ் பேசுகையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு தான் மக்கள் தீர்ப்பு வழங்கினர். தேர்தலின் போது 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதனை அரசியல் கணக்கு மாற்றிவிட்டது. தேர்தலில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். ஜனநாயகத்தின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கையை நான் ஏற்று கொள்கிறேன் என்றார்.

அப்போது, பா.ஜ.,வை எதிர்க்கும் சிலர், தேர்தலுக்கு முன்னர் பட்னவிஸ் பேசும் போது ,மீண்டும் முதல்வராக வருவேன் எனக்கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.


உறுதி


இதற்கு பட்னவிஸ் பதிலளித்து கூறுகையில், நான் மீண்டும் வருவேன் எனக்கூறினேன். ஆனால், அதற்கான கால அட்டவணையை தெரிவிக்க மறந்துவிட்டேன். இதற்கு நீங்கள் சில காலம் பொறுத்திருங்கள் என்பதை உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் வெறும் திட்டங்களை மட்டும் ஆரம்பிக்கவில்லை. அதனை துவக்கியும் வைத்துள்ளேன். அந்த திட்டத்தை துவக்கி வைக்க நான் மீண்டும் வருவேன். அது உங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-டிச-201901:28:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முகத்தில் புன்னகை, வளைந்த முதுகின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள். அஜித் பவார் இங்கே வந்திருக்கணும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
02-டிச-201908:55:50 IST Report Abuse
Indhuindian If only BJP was in a terrible hurry and make such grave mistake of accepting the support of an unreliable Ajit Pawar without even checking with its supremo Shard Pawar whether the offer was genuine or not and in such a break neck speed of repeal of the Presidents rule at such an unearthly hour and swearing in without the parties representatives and leaders being present, Mr Fadnavis would have in the Chief Minister's chair by now. But the proverbial HASTE HAS MADE IT WASTE.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
02-டிச-201908:27:16 IST Report Abuse
Anandan அதாவது குதிரை பேரம் நடத்த கொஞ்சகால அவகாசம் ஆகும், அதைத்தான் இப்படி பூடகமா சொல்றாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X