பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : டிச 02, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (5)
Advertisement
school,leave,rain,பள்ளி,விடுமுறை

இந்த செய்தியை கேட்க

சென்னை: கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.,2) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் விடுமுறை இன்று ஈடு செய்யும் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


புதுச்சேரியில் விடுமுறை:


புதுச்சேரி மாவட்டம் முழுவதும் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.






வானிலை மையம் எச்சரிக்கை:


இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு(சில மணி நேரங்களில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை) வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.


6 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட்

திருவள்ளூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு(சில மணி நேரங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை) வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.




'கேங்மேன்' தேர்வு ஒத்திவைப்பு:


தொடர் கனமழை காரணமாக சென்னையில் இன்று , நாளை (டிச.,2,3) நடைபெற இருந்த கேங்மேன் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.



தொடர் மழை காரணமாக சென்னை பல்கலையில் நாளை (டிச.02) நடை பெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக நாளை நடை பெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இப்பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் 4 வளாகங்களில் நடக்க இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையிலும் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-201907:38:54 IST Report Abuse
Shanmuga Raj அதிகப்படியான மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் பணிகளுக்கு செல்வோரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
Praisy -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-201920:03:06 IST Report Abuse
Praisy சென்னையில் உள்ள அனைத்து ரோடுகளும் மிக மிக மோசமாகவே உள்ளது மேலும் சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்கிறது இதை கருத்தில் கொண்டு பள்ளிக்கு விடுமுறை விடுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
01-டிச-201919:48:32 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ரெயின் ரெயின் கம் அகைன்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201908:59:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பள்ளிக்கூடம் போகாம டிமிக்கி அடிக்கவா? பாரதிதாசனின் பாடலை கேளுங்க நந்தினி.. "தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை.. சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி வேளைதோறும் கற்று வருவதால் படியும் மலைவாழை அல்லவோ கல்வி? - நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி (தலைவாரிப் பூச்சூடி)... படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால் கடிகாரம் ஓடுமுன் ஓடு - என் கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு - கல்வி பெண்கல்வி என்கின்றது அன்போடு... - புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் (ரங்கூன் ராதா படத்தில் பானுமதி பாடியுள்ளார்)...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X