பொது செய்தி

இந்தியா

2024 வரை பிசிசிஐ தலைவராக நீடிப்பாரா கங்குலி?

Updated : டிச 01, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (3)
Advertisement
BCCI,Ganguly,லோதா குழு, விதிமுறை, பி.சி.சி.ஐ., முடிவு

மும்பை: பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூட்டத்தில், லோதா குழுவின் விதிமுறைகளில் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கு அனுப்ப உள்ளனர். இந்த மாற்றத்திற்கு, அனுமதி கிடைத்தால் கங்குலி 2024 வரை பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க முடியும்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவராக கடந்த அக்டோபரில், இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பதவி ஏற்றார். இவரது தலைமையில், முதல் முறையாக பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று (டிச.,01) மும்பையில் நடந்தது. இதில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு அளித்த விதிமுறையில், எதிர்பார்த்தது போல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லோதா விதிமுறையில், மாநில சங்கம் அல்லது பி.சி.சி.ஐ., என இரு அமைப்பிலும் சேர்த்து மொத்தமே ஆறு ஆண்டுகள்தான் பதவி வகிக்க முடியும். அடுத்து பதவி ஏற்பதற்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் இருந்துவிட்டார். இதனால், பி.சி.சி.ஐ., தலைவராக 10 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடியும். இதே சிக்கலில் பி.சி.சி.ஐ., செயலரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷாவும் உள்ளார்.






கிடைக்குமா அனுமதி?


பொதுக்குழு கூட்டத்தில் இதை மாற்றுவதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இனி மாநில சங்கம், பி.சி.சி.ஐ., என தனித்தனியாக தொடர்ந்து தலா 6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். இந்த மாற்றத்திற்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் கங்குலி 2024 வரை பதவியில் நீடிக்க முடியும். இதைப்போல, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) செயற்குழு கூட்டத்தில், இனி பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக ஜெய்ஷா பங்கேற்பார்.

கிரிக்கெட் ஆலோசனைக்குழுவிலிருந்து ஏற்கனவே விலகிய முன்னாள் வீரர்களான சச்சின், லட்சுமணுக்கு மீண்டும் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ., தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, அனுமதி கிடைக்குமா என்பது தெரிய வரும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-201921:01:34 IST Report Abuse
யாரோ அப்போதுதான் நன்றாக கொள்ளை அடிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் கிறுக்கன் கிரிகெட்டுக்கும் ஜெய் ஷாவிற்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
02-டிச-201901:41:53 IST Report Abuse
uthappaகடந்த 2013 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலராக ஜெய்ஷா இருந்தார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X