பொது செய்தி

இந்தியா

ரூ.97 லட்சம் நன்கொடை; பேராசிரியை தாராளம்

Updated : டிச 02, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (16)
Advertisement
ரூ.97 லட்சம், நன்கொடை, பேராசிரியை, தாராளம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை, தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுவரை அவர், 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர், சித்திரலேகா மாலிக், 71. கல்லுாரியில், சமஸ்கிருத பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அவர், மாதந் தோறும், 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெற்று வருகிறார். கோல்கட்டாவில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வரும் சித்திரலேகா, தான் பெறும் ஓய்வூதியத்தில், உணவுச் செலவுக்கு போக, மற்ற அனைத்தையும் கல்வி மையங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். கடந்த, 2002லிருந்து இதுவரை, 97 லட்சம் ரூபாயை, அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சித்திரலேகா கூறியதாவது: நலிந்த கல்வி மையங்களுக்கு என் ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கி வருகிறேன். இதுதவிர, மாணவர்களின் ஆய்வு பணிக்கான செலவு தொகையையும், என் ஓய்வூதியத்தில் இருந்து வழங்கி வருகிறேன். நன்கொடையில் பெரும்பாலான தொகை, நான் படித்த ஜாதவ்பூர் பல்கலையின் மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளேன். நான் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, எனக்கு வழிகாட்டிய பேராசிரியர் பிதுபூஷண் பட்டாச்சார்யாவின் நினைவாக, பல்கலையில் அரங்கம் மற்றும் ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கு நன்கொடை அளித்துள்ளேன்.

ஒவ்வொருவரும் எளிமையாக வாழ வேண்டும் என்பதைத் தான், நம் வேதங்கள் கூறுகின்றன. இன்று சாப்பிடுவதற்கான உணவு இருந்தால் மட்டும் போதும்; நாளை பற்றி கவலையில்லை. எனவே, என் ஓய்வூதியத்தை மாணவர்களின் நலனுக்காக செலவிடுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
06-டிச-201916:10:45 IST Report Abuse
THINAKAREN KARAMANI கல்வி மையங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நன்கொடைகள் வழங்கி வரும் இந்த அம்மையார் அவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அளவற்ற ஆசை இருந்தும் வறுமையின் காரணமாக எத்தனையோ ஏழை மாணவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் இந்த அம்மையார் படிப்பு சம்பந்தமான உதவிகளை செய்தால் கோடிக்குடும்பங்கள் பாராட்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
06-டிச-201913:01:05 IST Report Abuse
V.B.RAM வர், 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். ??? தேவையில்லாத வேலை. ஆனானப்பட்ட பெரியாரே தான் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை ( வளர்ப்பு மகள் ) மனைவிபேரில் எழுதிவைதரே தவிர பொது மக்களுக்கு எழுதி வைக்கவில்லை. அதனால்தான் இப்போது கி. வீரமணி அதை ஆட்டயப்போட்டுவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
06-டிச-201912:27:05 IST Report Abuse
vns இந்த மாமனிதனை நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேணடிக் கொள்கிறேன். என்னால் இது போன்று தன்னலமற்று வாழ இயலவில்லயே என்று வெட்கப்படுகிறேன். தமிழகத்தில் ஏதாவது 'தமிழ் அறிஞர்' அல்லது ஸம்ஸ்கிரதம் இறந்து விட்டது எனும் மூடர்கள் இது போல் மற்றவர்களுக்கு உதவுகிறார்களா என்றறிய அவா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X