பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மயமாகிறது திருச்சி விமான நிலையம்

Added : டிச 01, 2019
Advertisement
 தனியார் மயமாகிறது திருச்சி விமான நிலையம்

புதுடில்லி: திருச்சி, வாரணாசி, இந்துார் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதாக, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.இதன்படி, இந்த விமான நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை, மேம்பாட்டு பணிகள் ஆகியவை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்துார், ராய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களையும் தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை, மத்திய விமான போக்குவரத்து துறை பரிசீலித்து முடிவு எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X