சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரூ.10 லட்சத்துடன் இடமாறுதலுக்கு அலையும் அதிகாரி!

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ரூ.10 லட்சத்துடன் இடமாறுதலுக்கு அலையும் அதிகாரி!

''எட்டு மாசமா சம்பளமே இல்லாம சிரமப்படறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார்,குப்பண்ணா.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திண்டிவனம்- - நகரி புதிய அகல ரயில் பாதை அமைக்கற பணிக்கு, நிலம் கையகப்படுத்த, திருத்தணி, ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்புல, தனி தாசில்தார் தலைமையில, வருவாய் துறை அலுவலர்கள் எட்டு பேரை நியமிச்சா ஓய்...

''இவா, 2017ம் வருஷம் வேலைகளை ஆரம்பிச்சா... இப்ப, தனி தாசில்தார், முதுநிலை ஆய்வாளர்னு ரெண்டே பேர் மட்டும் தான் இருக்கா...

''இவா, ரெண்டு பேருக்குமே, எட்டு மாசமா சம்பளம் கொடுக்கலை... மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதுக்கு, 'ரயில்வே துறையில இருந்து பணம் வந்தா தான், சம்பளம்'னு கை விரிச்சிட்டாளாம் ஓய்...

''வேற வழியில்லாம, தாசில்தாரும், ஆய்வாளரும், குடும்பச் செலவுக்கு, நகை, நட்டுகளை அடகு வச்சும், கடன் வாங்கியும், காலத்தை தள்ளிண்டு இருக்கா... 'பொங்கலுக்குள்ளயாவது சம்பளம் போடுவாளா'ன்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பதவி பறிபோன அதிகாரி, பயங்கர கடுப்புல இருக்காரு வே...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார், அண்ணாச்சி.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மாநில தேர்தல் ஆணையத்துல இருந்த ஒரு அதிகாரி, தேர்தல் வேலைகள்ல, சுறுசுறுப்பா இயங்கிட்டு இருந்தாரு... அவருக்கும், இன்னொரு முக்கிய அதிகாரிக்கும் சரிப்பட்டு வரலை... திடீர்னு, சுறுசுறுப்பு அதிகாரியை, வேற இடத்துக்கு மாத்திட்டாவ வே...

''அந்த அதிகாரி, உள்ளாட்சி தேர்தலை நடத்துறதுல ரொம்பவே அக்கறையா இருந்தாரு... கணக்கு, வழக்குகளை எல்லாம் கச்சிதமா வச்சிருந்தாரு... தன்னை இடமாற்றம் செஞ்சதுல, பெரிய அதிகாரியின் கை இருக்குன்னு, நண்பர்களிடம் புலம்பிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''பழனிசாமி இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாய்,

''10 லட்சம் ரூபாயை கையில வச்சுக்கிட்டு, மாறுதல் கேட்டு அலைஞ்சிட்டு இருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''வேலுார் மாவட்டம், காட்பாடியில, உணவு பாதுகாப்பு துறையில இருக்கிற ஒரு அதிகாரிக்கு, 'கட்டிங்' தரலைன்னா, அவர் டேபிளை விட்டு எந்த பைலும் நகரவே நகராது... இது பத்தி யாராவது கேட்டா, 'நான் யார், யாருக்கெல்லாம் படி அளக்கிறேன் தெரியுமா'ன்னு பெரிய பட்டியல் போடுறாரு பா...

''காட்பாடி சின்ன ஊரா இருக்கிறதால, பெரிய அளவுல பணம் பார்க்க முடியலைன்னு, 10 லட்சம் ரூபாயை கையில வச்சுக்கிட்டு, சேலம் மாவட்டத்துக்கு, 'டிரான்ஸ்பர்' கேட்டுட்டு இருக்கார்... அதே நேரம், இவர் எப்ப காட்பாடியை விட்டு போவார்னு காத்துட்டு இருக்கிற வியாபாரிகள், சேலம் வியாபாரிகளையும் உஷார்படுத்திட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''வாங்க கந்தவேல்... போன காரியம் ஜெயமா...'' என, நண்பரிடம் குப்பண்ணா வம்பளக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-டிச-201901:24:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒருசின்ன இடமாற்றலுக்கே 10 லட்சம் லஞ்சம். கணக்கு போட்டு பாருங்க லஞ்ச நாயகர்களின் கொள்ளையின் பரிமாணத்தை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X