சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பாவம் பட்னவிஸ்!

Added : டிச 01, 2019
Advertisement
 பாவம் பட்னவிஸ்!

'பதவியை தக்க வைக்க மேற்கொண்ட எல்லா தந்திரங்களும் வீணாகி விட்டனவே' என, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ்.

மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, சமீபத்தில் இரவோடு இரவாக நடந்த அரசியல் மாற்றத்தால், அதிகாலையில், 'வாபஸ்' பெறப்பட்டது. காலையில், 8:00 மணிக்கு முதல்வராக பதவியேற்க தயாராக இருக்கும்படி பட்னவிசுக்கு உத்தரவு வந்தது. அன்று இரவோடு இரவாக, சில காரியங்களை செய்தார், பட்னவிஸ். கிடைக்கப் போகும் பதவியை தக்க வைப்பதற்காக, ஜோதிடர்கள் சிலரின் ஆலோசனைப்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து, நான்கு சாமியார்களை, தன் இல்லத்துக்கு வரவழைத்து, சிறப்பு யாகம் நடத்தினார். அன்று இரவு முழுவதும், பட்னவிசுக்கு துாக்கமே இல்லை.

பதவியேற்றதும் தான், அவரது முகத்தில் நிம்மதி ஏற்பட்டது. ஆனால், இந்த யாகம் எல்லாம், நான்கே நாட்களில் வீணாகி விட்டது. இப்போது, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, முதல்வராகி விட்டதால், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார், பட்னவிஸ். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளோ, 'நாம் செய்யும் யாகங்கள், சில நேரத்தில், எதிர்மறைவான விளைவை ஏற்படுத்தி விடும்.

காங்கிரசின், அசோக் சவான் முதல்வராக இருந்தபோது, இப்படி ஒரு யாகம் நடத்தினார். ஆனால், ஒன்பதே நாட்களில், அவரது பதவி பறிபோய் விட்டது. பட்னவிஸ், பாவம்; அவருக்கு இந்த விபரமெல்லாம் தெரியாது' என, அர்த்தத்துடன் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X