ஏதோ சதி உள்ளது!

Added : டிச 01, 2019
Advertisement
 ஏதோ சதி உள்ளது!

பாக்., அமைச்சர் ஷேக் ரஷீத், 'கர்தார்பூர் சிறப்பு பாதை திட்டம், ராணுவத் தளபதி குமர் ஜாவத் பஜ்வாவின் திட்டம். இது இந்தியாவுக்கு நிரந்தரமாக பிரச்னையை ஏற்படுத்தும்' என கூறியுள்ளார். அமைதியை எதிர்பார்த்து இந்த திட்டத்துக்கு ஒப்புக் கொண்டோம். ஆனால், பாக்.,கின் இந்த நடவடிக்கைக்கு பின், ஏதோ சதி இருப்பது தெரிய வருகிறது.
அமரீந்தர் சிங்பஞ்சாப் முதல்வர், காங்கிரஸ்

மோடியால் சாத்தியம்!
என்னுடைய சகோதரர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபராக இருந்தபோது, இரு தரப்பிலும் பல விஷயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. தற்போது அதை புறந்தள்ளி, நாம் பயணிக்க வேண்டும். மோடி பிரதமராக இருப்பதால், இது சாத்தியம். இரு தரப்பு உறவை வலுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில், எதையும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்.
கோத்தபயா ராஜபக்சேஇலங்கை அதிபர்

மேம்படுத்துவோம்!
கோட்சே குறித்து, பிரக்யா கூறிய கருத்தை, கட்சியும், மத்திய அரசும் கண்டித்துள்ளது. நாட்டில் ஒரு அச்சநிலை உள்ளதாகக் கூறுகின்றனர். யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம். ஊடகங்கள் தான், தொடர்ந்து, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பொய் விமர்சனங்களை கூறி வருகின்றன.
அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X