பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.03 லட்சம் கோடி

Added : டிச 01, 2019
Advertisement

புதுடில்லி: கடந்த நவம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், முந்தைய மாதத்தை விட, 6 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து, 3,492 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது, அக்டோபரில், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாயாக இருந்தது. ஜி.எஸ்.டி., வருவாய், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், முறையே, 98 ஆயிரத்து, 202 கோடி மற்றும் 91 ஆயிரத்து, 916 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மூன்று மாதங்களுக்குப் பின், நவம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இதே மாதத்தில், மாநில ஜி.எஸ்.டி., வருவாயும், ஓராண்டில் இல்லாத வகையில், 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின், இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு ஏப்ரலில், அதிகபட்சமாக, 1.14 லட்சம் கோடி ரூபாய் வசூலானது.

மத்திய அரசு, ஜி.எஸ்.டி., மூலம், பலமுனை வரிகளை ஒழித்து, நாடு முழுவதும் ஒரே வரி முறையை அமல்படுத்தியதால், ஏராளமான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, உணவு தானியம், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு ஒரு குடும்பம் செய்யும் செலவில், மாதம், சராசரியாக, 320 ரூபாய் மிச்சமாவதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X