சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 01, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'மத்திய - மாநில அரசுகளிடம் வலியுறுத்தி இனி பயன் இல்லை. தேவைப்படும் பெண்களுக்கு, துப்பாக்கி வழங்கினால் தான், பாலியல் பலாத்காரங்களுக்கு தீர்வு ஏற்படும் போல இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: இந்தியா முழுவதும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை நிலவுகிறது. தினந்தோறும் ஏராளமான கொடூரங்கள், பெண்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன. எனவே, பெண்களை பாதுகாக்க, மத்திய - மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'நீங்களும் தான், பலமுறை சொல்லிட்டீங்க... அந்த நடிகர்களுக்கு புரிய மாட்டேங்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்து, தமிழகத்தில் மாற்றத்தையும், அதிசயத்தையும் நிகழ்த்தப் போவதாக கூறுவதால், ஒன்றும் நடக்காது. தமிழகத்தில், எப்போதும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான், தேர்தல்களில் போட்டியிருக்கும். அவர்கள் நினைப்பது போல, நடிகர்கள் கட்சிக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது.

'உணவு பாதுகாப்பு தான், இப்போதைய அவசியமான ஒன்று...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, நெல் விளையும் காவிரி டெல்டா பகுதியை, பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும். மத்திய அரசு அதை அறிவிக்க வேண்டும்; மாநில அரசு, அதை வலியுறுத்த வேண்டும்.

'இதற்கு முன் உங்கள் கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, விட்டு விட்டதை, மோடியைக் கொண்டு, இப்போது நிறைவேற்ற துடிக்கிறீர்களா...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு, அதிகாரப் பகிர்வு மட்டுமே. இந்த உரிமையை, இலங்கை தமிழர்களுக்கு பெற்றுத் தரும் பொறுப்பு, இந்திய பிரதமர் மோடிக்கு தான் இருக்கிறது. இதன் மூலம், இலங்கை தமிழர் வாழ்வுரிமையை, மத்திய அரசு காக்க வேண்டும்.
'நேரடியாக, 'எங்கள் கட்சிக்கு ஓட்டளித்து, ஆட்சியில் அமர வையுங்கள்' என, கேட்காமல், கொஞ்சம் மாற்றி, பக்குவமாக கேட்கிறீர்களா...' என, கேட்கத் துாண்டும் வகையில், நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் அறிக்கை: உள்ளாட்சி தேர்தலை வைத்து, தமிழக மக்களை இதுவரை ஏமாற்றி வந்த, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், இப்போது, அவர்களின் சொந்தக் கட்சியினரையே ஏமாற்ற துணிந்து விட்டனர். இதற்கெல்லாம் தீர்வு, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது தான்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X