அயோத்தி வழக்கில் சீராய்வு மனு முஸ்லிம் சட்டவாரியம் உறுதி

Added : டிச 01, 2019
Share
Advertisement
லக்னோ: 'அயோத்தி தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனர்' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. தீர்ப்புஇங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம்
 அயோத்தி வழக்கில் சீராய்வு மனு  முஸ்லிம் சட்டவாரியம் உறுதி

லக்னோ: 'அயோத்தி தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, 99 சதவீத முஸ்லிம்கள் விரும்புகின்றனர்' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. தீர்ப்புஇங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'அங்கு, ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு வேறொரு இடத்தில், 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.'இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, வழக்கின் ஒரு தரப்பான, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால், 'சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம். கடைசி நாளான, 9ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும்' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.குறைவுஇந்த நிலையில், அதன் பொதுச் செயலர் மவுலானா வாலி ரஹ்மானி கூறியதாவது:நீதித் துறை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் தான் சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம் என, அறிவித்தோம். ஆனால், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு, இந்த நம்பிக்கை சற்று குறைந்துள்ளது.எங்களுக்கு உள்ள சட்ட உரிமையை பயன்படுத்துவோம். கண்டிப்பாக எங்களுடைய மனு நிராகரிக்கப்படும். இருந்தாலும், சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.நாட்டில் உள்ள, 99 சதவீத முஸ்லிம்கள், சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், மீதமுள்ள, 1 சதவீதத்தினர், தாங்கள் தான் பெரும்பான்மை மக்களின் முடிவை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

குழப்பத்தை ஏற்படுத்தும்!
தங்களுடைய தரப்பை தெரிவிக்க, நீதிமன்றத்தை நாட, இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில், நீண்டகாலமாக இருந்த ஒரு பிரச்னைக்கு, தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் குழப்ப வேண்டாம். சீராய்வு மனு தாக்கல் என்பது, குழப்பத்தையும், மோதலையுமே ஏற்படுத்தும்.முக்தார் அப்பாஸ் நக்விமத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X