சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பொழுதுபோக்கு ஏதும் கிடையாது; முழுதும் உழைப்பே!

Added : டிச 01, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆண்களே தைரிய மாக ஈடுபடத் தயங்கும், லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் சத்யபிரியா: சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பாராசூர். பெற்றோர் பட்டதாரிகள்; நடுத்தர குடும்பம். அரசு பள்ளியில் தான் படித்தேன். ஆசிரியர் ஆக வேண்டும் என விருப்பம்; பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை.கரஸ்பான்டன்சில் தான், பி.காம்., படித்தேன். 2002ல், ஆங்கிலம் கற்பதற்காக
 பொழுதுபோக்கு ஏதும் கிடையாது; முழுதும் உழைப்பே!

ஆண்களே தைரிய மாக ஈடுபடத் தயங்கும், லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் சத்யபிரியா: சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பாராசூர். பெற்றோர் பட்டதாரிகள்; நடுத்தர குடும்பம். அரசு பள்ளியில் தான் படித்தேன். ஆசிரியர் ஆக வேண்டும் என விருப்பம்; பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை.கரஸ்பான்டன்சில் தான், பி.காம்., படித்தேன். 2002ல், ஆங்கிலம் கற்பதற்காக சென்னை வந்தேன். கல்விக் கட்டணம் செலுத்துவதற்குப் பதில், அந்த நிறுவனத்தில் ஓராண்டு வேலை பார்த்தேன். அதன் பின், இன்னொரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. முதலில், 4,500 ரூபாய் தான் சம்பளம். கடுமையாக உழைத்தேன்; மூன்றே ஆண்டுகளில், 45 ஆயிரம் ரூபாயாக சம்பளம் உயர்ந்தது.

சிரமப்பட்டு கொஞ்சம் பணம் சேர்த்தேன்; 2010ல், 'பவானிஸ் இன்ஜினியரிங்' என்ற நிறுவனத்தை துவக்கினேன். தினமும் போராட்டம் தான். நிறைய அனுபவம் கிடைத்தது. 2015ல், மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின், 'சேல்ஸ் அண்டு சர்வீஸ்' பணிகளை மேற்கொண்டேன். படிப்படியாக, வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்தேன். பழைய பொருட்களை ரிப்பேர் செய்து, மீண்டும் புழங்கும் மனப்பான்மை மக்களிடம் குறைந்து வருகிறது. அதனால், 'சர்வீஸ் சென்டர்' தொழிலில் லாபம் இல்லை.

அதனால், மிகுந்த திட்டமிடுதலுடன், ஒரே நேரத்தில், 30 லாரிகளை வாங்கி, வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறேன்; 40 டிரைவர்கள் உள்ளனர்.இதனால், இரவு, பகல் எந்நேரமும் தொழில் பற்றிய நினைப்பு தான்; சினிமா பார்ப்பது உட்பட எந்த பொழுதுபோக்கும் கிடையாது; அதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. அலுவலக வேலை முடிந்து, இரவு, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், நிம்மதியாக படுத்து துாங்க முடியாது. லாரிகளை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் பேசிக் கொண்டே இருப்பர்.ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகள் தெரியும். வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருப்பதால், துாக்கத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். தொழிலில் என் சகோதரர்கள் ரமேஷ் மற்றும் சீனிவாசன் உதவியாக இருக்கின்றனர்.

ஒரு தொழிலில் இறங்குவதற்கு முன் யோசிக்கலாம்; இறங்கி விட்டால், எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கக் கூடாது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக எதிர்மறையாக யோசிக்கக் கூடாது; நஷ்டம் வந்தாலும் அஞ்சக் கூடாது. உதவி என, தேடி வருவோருக்கு உதவ வேண்டும்; அதற்கான வளத்தை பெருக்க வேண்டும். அதற்கு, திருமணம் தடையாக இருக்கும் என்பதால், திருமணத்தையே வேண்டாம் என, முடிவு செய்து, இரவு, பகலாக உழைக்கிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
02-டிச-201918:23:44 IST Report Abuse
R chandar Hats off to this lady very admirable , as this job is very difficult for handling by men itself how she had a courage to run this business , let god gives her good strength ,health and wealth for her achievement. Her family should be proud of her , appreciate her brothers who are supporting her , good one nice to see the news of good association and brotherhood
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
02-டிச-201911:59:10 IST Report Abuse
Gopi வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் சமூக அக்கறையுடன் இருப்பது சரிதான். ஆனால் உங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டும்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
02-டிச-201910:54:05 IST Report Abuse
ponssasi எனது குடும்பம் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக லாரி தொழில் செய்து வந்தனர், 2000. பின் லாரி தொழில் லாபகரமாக இல்லை, லாரி சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை நடத்தினால் மட்டும் லாரி தொழில் லாபகரமானதாக இருக்கும். நான் உயிராக நேசித்த தொழில் நட்டம் ஏற்பட்ட பின், கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் B.COM. படித்து ஆங்கிலம் தெரியாமல் அதை கற்க சென்னை வந்து நான் பட்ட பாடு பெரும்பாடு. இது என் சொந்த அனுபவம், லாரி தொழில் நட்டம் ஏற்பட்ட பின் நானும் ஆங்கிலம் படிக்க சென்னை வந்து பல கடுமையான வேலைகள் செய்து இன்று ஒரு ஆடிட்டர் ஆக நல்ல நிலையில் உள்ளேன். நீங்கள் வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள் சகோதரி (என்னை படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X