மஹா., சபாநாயகராக காங்., நானா படோல் தேர்வு; பா.ஜ வேட்பாளர் திடீர் வாபஸ்

Updated : டிச 03, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (2+ 2)
Advertisement
மஹாராஷ்டிரா, நானா படோல், காங்., பா.ஜ., விலகல், பட்நாவிஸ், சபாநாயகர்

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கான போட்டியில் இருந்து, பா.ஜ., வாபஸ் பெற்றதை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல், 57, புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., - தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.நான்கு முறை வெற்றிநேற்று, சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் போட்டியிடுவதற்காக, காங்கிரசின் நானா படோலும், பா.ஜ.,வின் கிஷான் கதோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று சட்டசபை கூடியதும், போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவதாக, கிஷான் கதோர் அறிவித்தார். இதையடுத்து, சபாநாயகர் தேர்தலில் நானா படோல் வெற்றி பெற்றதாக, இடைக்கால சபாநாயகர் திலீப் வால்சே பாட்டீல் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவும், முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசும், நானா படோலை அழைத்து வந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். முதல்வர் உத்தவ் தாக்கரே, பட்னவிஸ் மற்றும் தேசியவாத காங்., - காங்., கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், நானா படோலின் அரசியல் பணிகளை பாராட்டி பேசினர்.

புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள நானா படோல், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சகோலி தொகுதியிலிருந்து, நான்கு முறை வெற்றி பெற்றவர்.காங்கிரஸ் மேலிடத்துக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்த படோல், 2014ல், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். பின், பட்னவிசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

எதிர்க்கட்சி தலைவர்சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சபாநாயகர் நானா படோல் அறிவித்தார். அவருக்கு, முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்., - தேசியவாத காங்., கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து நடந்த, சட்டசபை மற்றும் மேல்சபை கூட்டு கூட்டத்தில், கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உரையாற்றினார்.


சிறுபிள்ளை பேச்சு!


தேவேந்திர பட்னவிசின் சிறு பிள்ளைத்தனமான பேச்சும், முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்ற அவசரமும், பா.ஜ.,வை மூழ்கடித்து விட்டது. பட்னவிசின் அதீத நம்பிக்கை, அவரது அரசியல் வாழ்வை அழித்து விட்டது. சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனாரூ.25 ஆயிரம் எங்கே? நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவோம் என, உத்தவ் தாக்கரே ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது அவர் முதல்வராகி விட்டார். எனவே, தன் வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும்.

தேவேந்திர பட்னவிஸ்முன்னாள் முதல்வர், பா.ஜ.,பட்னவிசை கிண்டலடித்த முதல்வர் உத்தவ் தாக்கரேசட்டசபையில் நேற்று, முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:தேவேந்திர பட்னவிஸ், என் நெருங்கிய நண்பர். அவரை எப்போதும், எதிர்க்கட்சியின் தலைவராக பார்த்தது இல்லை; நண்பராகவே பார்க்கிறேன். ஒரே இரவில் நடந்த மாற்றங்களால், நான் இந்த பதவிக்கு வரவில்லை. மஹாராஷ்டிரா மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன். 'நான் மீண்டும் வருவேன்' என, எப்போதும் கூறியது இல்லை. ஆனாலும், இந்த சபைக்கு வந்துள்ளேன். இவ்வாறு, அவர் பேசினார்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததும், ஆட்சி அமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டது. அப்போது பேட்டி அளித்த தேவேந்திர பட்னவிஸ், 'நான் மீண்டும் வருவேன்; முதல்வராவேன்' என, கூறியிருந்தார்.அவரை கிண்டலடிக்கும் வகையில், 'நான் மீண்டும் வருவேன்' என்ற வார்த்தையை, உத்தவ் தாக்கரே நேற்று பயன்படுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
02-டிச-201907:55:52 IST Report Abuse
blocked user எவ்வளவு நாட்கள்தான் ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-201905:11:47 IST Report Abuse
Nepolian S என்ன திடீர் வாபஸ் ...நின்னா ஜெயிக்க முடியாதுனு தெரியாதா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X