பொது செய்தி

இந்தியா

11,000 டன் வெங்காய இறக்குமதிக்கு துருக்கியுடன் ஒப்பந்தம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

Added : டிச 01, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 11,000 டன் வெங்காய இறக்குமதிக்கு துருக்கியுடன் ஒப்பந்தம்  விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசின் எம்.எம்.டி.சி., நிறுவனம்,எகிப்தைத் தொடர்ந்து, துருக்கி நாட்டில் இருந்து, 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், வெங்காயஉற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்தாண்டு, பருவம் தவறி பெய்த மழையால், இந்த மூன்று மாநிலங்களிலும்,வெங்காய உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ, 100 ரூபாயை தாண்டியது. இதையடுத்து, வெங்காயம் விலையை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, டன்னுக்கு, 60 ஆயிரம் ரூபாயாகஅதிகரிக்கப்பட்டது. எனினும், விலை கட்டுக்குள் வராததால், அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களின் வெங்காய கையிருப்புக்கும், வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. உயர்மட்டக் குழுமேலும், வெங்காயம் விலையை கண்காணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நிதி, நுகர்வோர் விவகாரங்கள், வேளாண் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.இது தவிர, வெளிநாடுகளில் இருந்து, 1.20 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம், முதற்கட்டமாக, எகிப்தில்இருந்து, 6,090 டன்வெங்காயம் வாங்குகிறது. இந்த வெங்காயத்தை ஏற்றி வரும் சரக்கு கப்பல், இரு வாரங்களில், மும்பை துறைமுகத்திற்கு வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சரக்கு இறக்குமதியான பின், வெங்காயம் விலை ஓரளவு கட்டுக்குள் வரும் என, கருதப்படுகிறது.துருக்கி இந்நிலையில், மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த, துருக்கி நாட்டில் இருந்து, 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய, எம்.எம்.டி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த வெங்காயம், அடுத்த மாதம் இறக்குமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எம்.எம்.டி.சி., மேலும் பல நாடுகளிடம் வெங்காயம் கொள்முதல் செய்வது குறித்து பேசி வருகிறது.இதைத் தொடர்ந்து, வெங்காய இறக்குமதி தொடர்பாக, மேலும் பல நாடுகளுடன், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், புத்தாண்டில், வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்புவெங்காயம் ஒரு பருவப் பயிர். முதலில், நவ., - ஜன., வரையும், அடுத்து, மார்ச் - ஜூன் வரையிலும், இரு சாகுபடி நடைபெறும். ஜூலை - அக்., வரை சந்தையில் வெங்காய வரத்து அதிகம் இருக்கும். நடப்பு, 2019- - 20ம் பயிர் காலத்தில், பருவமழை தாமதமானதால், வெங்காய நடவுப் பணிகள், வழக்கத்தை விட, மூன்று - நான்கு வாரங்கள் கழித்து துவங்கின. அதுமட்டுமின்றி, ஜூலை - அக்., வரையிலான, கரீப் பருவத்தில், வெங்காயம் பயிரிடும் பரப்பும் குறைந்துள்ளது. இத்துடன், வெங்காயம் அதிகம் விளையும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அறுவடை காலத்தில், பருவம் தவறி மழை பெய்தது. இதனால், பல ஹெக்டர் பரப்பில் பயிர் செய்யப்பட்ட வெங்காயம் பாழானது. இத்தகைய தாக்கங்கள் காரணமாக, வெங்காய உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த சந்தை பருவத்தை விட, நடப்பு சந்தை பருவத்தில், வெங்காயம் உற்பத்தி, 26 சதவீதம் குறைந்து, 52 லட்சம் டன்னாக சரியும் என, மத்திய வேளாண் துறை அமைச்சகம் மதிப்பிட்டு உள்ளது.

ஆட்சிக்கு தலைவலி?
கடந்த, 2013ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வெங்காயம் விலை கிலோ, 100 ரூபாயை தாண்டியது. இதுவும், 2014 பொதுத் தேர்த லில், ஆளும் கட்சி தோல்வி கண்டதற்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது, இரண்டாவது முறையாக, வெங்காயம் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.நேற்றைய விலைநேற்றைய நிலவரப்படி,கோல்கட்டாவில், 1 கிலோ வெங்காயம், 90 ரூபாய்க்கு விற்பனையானது. இது, மும்பை, சென்னை, டில்லி ஆகிய நகரங்களில், முறையே, 82, 80 மற்றும், 76 ரூபாயாக இருந்தது.மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில், 1 கிலோ வெங்காயம், 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-டிச-201921:11:41 IST Report Abuse
தமிழ்வேல் அதெப்படி அதிராடியாகும் ? இது என்ன தலைப்பு ? ஆகஸ்டிலிருந்து விலை கிடு கிடுன்னு ஏறுது. ஒரு மாசத்துக்கு முன்னாலேயே இறக்குமதி செய்யப்படும்னு மத்திய அரசு சொல்லுச்சு. ஆனா இப்போதான் முடிவு பண்ணி இருக்கு. இன்னும் வந்தப்படில்ல. அதெப்படி அதிராடியாகும் ?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-டிச-201920:58:47 IST Report Abuse
Sampath Kumar துருக்கி வெங்காயம் புடிக்காதே ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X