சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம் : அலைபேசிக்கு அடிமை

Added : டிச 01, 2019
Advertisement


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நான்கில் ஒரு குழந்தை 'ஸ்மார்ட்போனுக்கு' அடிமையாகி உள்ளனர். ஒரு நாளைக்கு பல மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் 'டீன் ஏஜ்' பருவத்தினர், எப்போதாவது 'ஸ்மார்ட்போன்' இல்லாவிட்டால் ஒருவித ஏக்கம் மற்றும் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லுாரி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம் : ஆழமான ஆறு


இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இது சீனா, இந்தியா, வங்கதேசம் என மூன்று நாடுகளில் பாய்கிறது. இந்தியாவின் ஆழமான ஆறு என அழைக்கப்படுகிறது. கவுகாத்தி, திப்ருஹார்க், தேஜ்பூர், துப்ரி ஆகிய இந்திய நகரங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன. இமயமலையில் திபெத்தின் மானசரோவர் என்ற இடத்தில் தொடங்கி, 2,900 கி.மீ., துாரம் பாய்ந்து கங்கை ஆற்றில் கலக்கிறது. இதன் அதிகபட்ச ஆழம் 380 அடி. சராசரி ஆழம் 124 அடி. பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அசாமில் இதனால் உருவான பெரிய ஆற்று தீவு மஜூலி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X